Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

கார்த்தியின் ‘அலெக்ஸ் பாண்டியன்’ முதல் நாள் தியேட்டர் ரியார்ஷன் ஆளை அடிக்கிறது!

கார்த்தியின் ‘அலெக்ஸ் பாண்டியன்’ முதல் நாள் தியேட்டர் ரியார்ஷன் ஆளை அடிக்கிறது!
11th January 2013 6.54AM

கமலின் விஸ்வரூபம் பொங்கலுக்கு இல்லை என்பது உறுதியானதும், ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டிருந்த அலெக்ஸ் பாண்டியனின் (இன்று ரிலீஸ்) முதல் நாள் தியேட்டர் ரியாக்ஷன்,

 கார்த்தியை கதற வைக்கும் அளவில் உள்ளது.


கார்த்தி ரசிகர்களிடம் இருந்தேகூட பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடையாது (மசாலா சினிமான்னா இப்படிதான் காமிக்க முடியும் சார்) என்பதுதான், அதிர்ச்சி.


படத்தின் முதல்பாதி முழுவதும் சந்தானத்தின் மூன்று (தாவணி விலகிய) தங்கைகள் கார்த்தியின்மீது மையல் கொண்டு மோதும், மோதும், மோதிக்கொண்டே இருக்கும் காட்சிகள், மகா கேவலம் என்ற டாக் அதிகம் உள்ளது.


மூன்று பெண்களின் அம்மா வேறு டபுள் மீனிங் டயலாக்குகளாக பேசித் தள்ளுகிறார் என்று தலையில் அடிக்கிறார்கள்.


சினிமா ட்ரென்ட் பற்றி தெரிந்தவர்கள், “இந்தப் படம் சூப்பர் ரூப்பர் ஹிட்டாகியிருக்கும், ஆனால், கொஞ்சம் லேட்டாக, தவறான இடத்தில் வந்துவிட்டது” என்கிறார்கள். அவர்களின் கருத்துப்படி, 1980களில் ஆந்திராவில் வெளியாகியிருந்தால் கூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கக்கூடிய படமாம் இது.


ரசிகர்களை போட்டு இப்படி காயப் போடாமல், சீக்கிரம் பவர் ஸ்டார் படத்தை (க.ல.தி.ஆ.) போடுங்கப்பா.


சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: