Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

ஃபேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை திருமணம் செய்கிறாரா நான் ஈ நாயகன் நானி.

ஃபேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை திருமணம் செய்கிறாரா நான் ஈ நாயகன் நானி.
14th August 2012 3.17AM

‘நான் ஈ’ படம் தமிழ், தெலுங்கில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகனாக நடித்திருப்பவர்

  நானி.


 


இவருக்கு கவுதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தெலுங்கில் சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். நானிக்கு திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணமகள் பெயர் அஞ்சனா.


 


இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நவம்பரில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.


 


இதுகுறித்து நானி கூறும்போது, அஞ்சனாவுக்கும், எனக்கும் விசாகப்பட்டினத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவீட்டு குடும்பத்தினரும் பங்கேற்றனர். திருமண தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.


 


மேலும் அவர் கூறும்போது, சில பத்திரிகைகளில் நானும் அஞ்சனாவும் ‘பேஸ்புக்’ மூலம் அறிமுகமானதாக செய்திகள் வந்துள்ளன. அது தவறானது. இருவரும் 5 வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் மூலம் அறிமுகமானோம். அப்போது நான் சினிமாவில் நடிக்கவில்லை. நண்பர்களாக பழகினோம். பின்னர் காதல் மலர்ந்தது என்றார்.


சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: