Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

கோலிவுட்டுக்கு திரும்புவேன்: ஸ்ரீதேவி நம்பிக்கை

கோலிவுட்டுக்கு திரும்புவேன்: ஸ்ரீதேவி நம்பிக்கை
1st September 2012 1.33PM

ரஜினி, கமலுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றார் ஸ்ரீதேவி. இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் ‘இங்லிஷ் விங்லிஷ்Õ என்ற படத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவி. கவுரி ஷிண்டே

 இயக்குகிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு ஸ்ரீதேவி


கூறியதாவது:



கோலிவுட்டிலிருந்து 2 நாட்களுக்கு முன்புதான் பாலிவுட்டில் சென்றதுபோல் இருக்கிறது. அதற்குள் இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டது. முதன்முறையாக பெண் இயக்குனர் படத்தில் நடிக்கிறேன். ‘கோலிவுட்டில் நடிக்க மாட்டீர்களா?Õ என்கிறார்கள். எனக்கு பிடித்த வகையில் ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்பேன். ரஜினி, கமல் இன்றைக்கு பெரிய ஸ்டார்களாக உயர்ந்திருக்கிறார்கள். அது பெருமையாக இருக்கிறது. அவர்களுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாது.



இந்தியில் ரீஎன்ட்ரி ஆகும் Ôஇங்லிஷ் விங்லிஷ்Õ கதாபாத்திரம் வித்தியாசமானது. அதனால் நடித்தேன். அஜீத்குமார் சம்பளமே வாங்காமல் நடித்தார். என் மகள்கள் இப்போது படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நடிகையாவது பற்றி இப்போது யோசிக்கவில்லை. அவர்களும் கொஞ்சம் தமிழ் பேசுவார்கள். நான் தமிழ்ப் பெண். தமிழை மறக்கவில்லை. எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை. என் குடும்பம் குழந்தைகளை பார்த்துக்கொண்டிருப்பதுதான் சந்தோஷம். இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.



சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: