Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

சதாவின் புடவை ஸ்டேட்மென்ட் !! அதிரடீ

சதாவின் புடவை ஸ்டேட்மென்ட் !! அதிரடீ
9th September 2012 6.10AM

இந்தியாவின் பாரம்பரிய உடை புடவைதான் பெண்கள் புடவை உடுத்துவதே அழகு என்று ஸ்டேட்மென்ட் விடுத்துள்ளார் நடிகை சதா.

ஜெயம் படம் மூலம் தமிழில் அறிமுகமான சதா பாவடை தாவணி, புடவையில்தான் நடித்து வந்தார். பின்னர் பிரியசகி படத்தில் கொஞ்சம் கவர்ச்சி உடையில் தோன்றிய அவர் அந்நியனில் எந்த உடையும் உடுத்தி தான் நடிக்கத் தயார் என்ற அளவில் நடித்திருந்தார். இருந்தாலும் பெரிய அளவில் அவருக்கு படங்கள் கமிட் ஆகவில்லை.


நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் `மைதிலி' படத்தில் சதா நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல் காட்சியில் மூன்று விதமான சேலைகளில் தோன்றி நடித்திருகிறாராம்.



முந்தைய படங்களில் மாடர்ன் டிரெஸ்சில் நடித்த சதா திடீரென்று புடவைக்கு மாறியது குறித்து சதாவிடம் பலரும் கேட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள அவர், இது நமது கலாசார உடை ஆகும். வெளிநாடுகளில் இருந்தாலும் முக்கிய நிகழ்ச்சிகளில் சேலை உடுத்த நாம் மறப்பதில்லை. பெண்களுக்கு புடவையே அழகை தரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. பெண்களின் உடல் அமைப்புக்கு சேலைதான் பொருத்தமானது என்று கூறியுள்ளார். `மைதிலி' படத்தின் பாடல் காட்சியில் சேலை உடுத்தி நடித்து இருக்கிறேன். மூன்று விதமான சேலை உடுத்தி நடனம் ஆடி இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


‘மைதிலி' படத்தை தவிர 'மன பிரேமா' என்ற தெலுங்கு படத்திலும் தமிழில் தயாராகும் 'மதகஜராஜா' படத்தில் கவுரவ வேடத்திலும் நடிக்கிறார் சதா.



மேலும் கோலிவுட் செய்திகள்
ஆர்யாவை அடுத்து நயனுக்கு யார் நெருக்கம்னு தெரியுமா?  ஆர்யாவை அடுத்து நயனுக்கு யார் நெருக்கம்னு தெரியுமா?
'பொறுக்கி'ன்னு சொன்னா இமேஜ் பாதிக்குமா??... நடிகைக்கு தயாரிப்பாளர் கேள்வி!  'பொறுக்கி'ன்னு சொன்னா இமேஜ் பாதிக்குமா??... நடிகைக்கு தயாரிப்பாளர் கேள்வி!
அஜித்தின் கதையில் விஜய்... மீண்டும் இணைகிறது முருகதாஸ் - விஜய் கூட்டணி   அஜித்தின் கதையில் விஜய்... மீண்டும் இணைகிறது முருகதாஸ் - விஜய் கூட்டணி
பீட்சா இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்  பீட்சா இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்
சிவகார்த்திகேயனும் 160 மில்லியன் டாலரும்...  சிவகார்த்திகேயனும் 160 மில்லியன் டாலரும்...
தனுஷை தொடர்ந்து ரெய்னா : கிசுகிசுவுக்கு பஞ்சமில்லாத ஸ்ருதி  தனுஷை தொடர்ந்து ரெய்னா : கிசுகிசுவுக்கு பஞ்சமில்லாத ஸ்ருதி
நயன்தாராவிற்கு குவியும் பட வாய்ப்புக்கள்..!   நயன்தாராவிற்கு குவியும் பட வாய்ப்புக்கள்..!
ரவிதேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்!   ரவிதேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்!
நடிகை அஞ்சு அரவிந்த் ஆபாசப் படங்கள்... பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்  நடிகை அஞ்சு அரவிந்த் ஆபாசப் படங்கள்... பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்
தனுஷை நெகிழ வைத்த விஜய்!   தனுஷை நெகிழ வைத்த விஜய்!

சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: