8th September 2012 3.55AM
மணிரத்னத்தின் தளபதியில் கலெக்டராக உருவெடுத்து, அதே மணிரத்னத்தின் ரோஜா படம்மூலம் ஹீரோவாக அவதரித்தவர்
அரவிந்த்சாமி. தொடர்ந்து பம்பாய், இந்திரா மின்சார கனவு உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து ஏராளமான பெண் ரசிகைகளுக்கு சொந்தக்காரர் ஆன இவரின் குடும்பத்தில் இருந்து இன்னொரு சினிமா வாரிசு வந்திருக்கிறார். அரவிந்த்சாமியின் சித்தப்பா மகள் விபா, நான் படம்மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி உள்ளார். விபாவை பற்றிய சில தகவல்கள் இதோ...
சென்னையில் உள்ள பாலவித்யாமந்திர் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தவர், பின் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் டூரிசம் பற்றிய படிப்புகளை படித்தார். சிறுவயது முதலே நடிகை ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அதனால் படிப்பை முடித்து மாடலிங் துறைக்கு சென்று பல விளம்பர படங்களில் நடித்தார். இதையடுத்து கன்னடத்தில் ஆட்டா என்ற படத்தில் அறிமுகமானார். தமிழில் இப்போது வெளிவந்துள்ள நான் படத்தில் விஜய்ஆன்டனி உடன் நடித்தார்.
இதைத்தொடர்ந்து விஜய் வசந்த் உடன் மதில் மேல் பூனை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். நன்கு சரளமாக தமிழ் பேச தெரிந்த நடிகை விபா என்பது இவருக்கு பெரிய ப்ளஸ். விபா பெயர் காரணம் கேட்டால் முழு நிலவு என்று பட்டென்று பதில் சொல்கிறார். நீங்கள் யார் படத்தில் நடிக்க ஆசைப்படுறீங்க என்று கேட்டால்,
கவுதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ஜெசி கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார். இப்படி தெளிவாக பேசும் விபாவை பார்த்தால் தமிழ் சினிமாவில் மிக உயர்ந்த இடத்தை தொடுவார் என்றே தெரிகிறது. 5.7 அடி அசத்தலான உயரத்தில், பளிங்கு சிலை போல தமிழ் சினிமாவிற்கு கிடைத்த புது நிலவு விபா என்றால் அது மிகையல்ல.