Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

திருமண நிகழ்ச்சிகளில் பணத்துக்காக ஆடுவதாக அவதூறு பரப்புவதா?: தமன்

திருமண நிகழ்ச்சிகளில் பணத்துக்காக ஆடுவதாக அவதூறு பரப்புவதா?: தமன்
18th June 2012 2.28AM

நடிகை தமன்னா திருமண நிகழ்ச்சிகளில் நடனமாட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பல லட்சங்கள்

 கேட்டதாகவும் கூறப்படுகிறது.


முதல் தடவையாக ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு நடிகர் ராம்சரண் திருமணத்தில் தமன்னா ஆடினார். அவருடன் சேர்ந்து ஸ்ரேயாவும் நடனம் ஆடினார். இதற்காக இருவருக்கும் பெரிய தொகை கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. பணம் வாங்கிய பிறகே தமன்னா மேடையில் ஆட வந்தார் என்றும் கூறப்பட்டது.


இதுபோல் முக்கிய பிரமுகர்களின் திருமணங்களில் ஆடுவதற்காக மானேஜர் மூலம் பண பேரம் பேசி வருவதாகவும் கிசுகிசுக்கள் வந்துள்ளன. இதுகுறித்து தமன்னா விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-


திருமண நிகழ்ச்சிகளில் பணம் வாங்கிக் கொண்டு நான் நடனம் ஆடவில்லை. ராம்சரண் எனக்கு நெருங்கிய நண்பர். எனவேதான் அவரது திருமணத்தில் ஆடினேன். அதற்காக காசு எதுவும் வாங்கவில்லை பணத்துக்காக ஆடினேன் என்று வதந்திகள் பரப்புவது என்னை கேவலப்படுத்தும் செயல் ஆகும். நான் அதுமாதிரி பெண் இல்லை. எங்கள் வீட்டில் இதுபோல் மங்கள நிகழச்சி நடந்தால் நான் ஆடி இருப்பேன். அதே உணர்வில்தான் ராம்சரண் திருமணத்தில் ஆடினேன்.


இவ்வாறு தமன்னா கூறினார்.



சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: