Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

கொட்டும் மழையில் “சிக்ஸ் பேக்“ காட்டி ஆடிப் பாடி அதிர வைத்த ஜெனீபர் லோபஸ் (படங்கள் இனைப்பு)

கொட்டும் மழையில் “சிக்ஸ் பேக்“ காட்டி ஆடிப் பாடி அதிர வைத்த ஜெனீபர் லோபஸ் (படங்கள் இனைப்பு)
3rd July 2012 11.08AM

வயசானாலும் உன்னோட ஸ்டைல் மட்டும் இன்னும் மாறவே இல்லை என்று படையப்பாவில் ரஜினியைப் பார்த்து ரம்யா

 கிருஷ்ணன் 'சைட்' அடித்துக் கூறுவார். அது நிச்சயம் ஜெனீபர் லோபஸுக்கும் பொருந்தும். அவருடைய பாடல்களுக்கு அடிமையானவர்களை விட அவரது அசரடிக்கும் அந்த அமைதியான அழகுக்கு அடிமையாக இருப்பவர்கள்தான் அதிகம்.

 


இன்று 42 வயதில் இருக்கும் ஜெனீபருக்கு உலகம் முழுவதும் இன்னும் ரசிகர்களிடம் மவுசு குறையவில்லை. இந்தநிலையில் 48 இசைக் கச்சேரிகளுடன் புதிய உலகப் பயணத்தைத் தொடங்கியுள்ள ஜெனீபர் லோபஸ் பிரேசில் நாட்டில் அதிரடியான ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி அனைவரையும் அசத்தி விட்டார்.


கொட்டும் மழையில் அவரது இசை நிகழ்ச்சி நடந்தது. மழையைப் பொருட்படுத்தாமல், ஜெனீபரோடு கூடவே பாடி நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்தனர் பிரேசில் ரசிகர்கள்.


பிரேசிலின் ரெசிப் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது ஜெனீபர் தனது அசர வைக்கும் குரலை மட்டுமல்லாமல், தனது 6 பேக் உடல் வனப்பையும் காட்டி அனைவரையும் திக்குமுக்காட வைத்தார். இவருக்கா 42 வயது என்று அத்தனை பேரும் வாயடைத்துப் போகும் வகையில் மின்னல் போல மேடையில் ஏறிப் பாடி ஆடினார் ஜெனீபர்.


அவரது குரல் வசீகரமும், உடல் கட்டுக்கோப்பும் அனைவரையும் ஜெனீபர் பைத்தியங்களாக்கி விட்டது. நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிகர்கள், மழையைப் பொருட்படுத்தாமல் அனுபவித்து ரசித்தது ஜெனீபரையும் உற்சாகத்தில் ஆழ்த்தி விட்டது.


இந்த நிகழ்ச்சியுடன் தனது உலக சுற்றுப்பயணத்தின், தென் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டார் ஜெனீபர். அதன் பின்னர் தனது சொந்த ஊரான நியூயார்க்குக்கு சிறிய ஓய்வுக்காக கிளம்பிச் சென்றார்.


தனது பிரேசில் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு ஜெனீபரை திக்குமுக்காட வைத்துள்ளது. அத்தனை ரசிகர்களுக்கும் தனது நன்றிகளைக் கூறிக் கொள்வதாக டிவிட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார் ஜெனீபர்.


அடுத்து தொடரப் போகும் தனது இசை நிகழ்ச்சியில், 25 வயதான தனது காதலரும், டான்ஸருமான கேஸ்பர் ஸ்மார்ட்டுடன் இணைந்து கலக்கப் போகிறார் ஜெனீபர் லோபஸ்.


பழசு பழசுதாம்ப்பா...!



 





 


மேலும் கோலிவுட் செய்திகள்
ஆர்யாவை அடுத்து நயனுக்கு யார் நெருக்கம்னு தெரியுமா?  ஆர்யாவை அடுத்து நயனுக்கு யார் நெருக்கம்னு தெரியுமா?
'பொறுக்கி'ன்னு சொன்னா இமேஜ் பாதிக்குமா??... நடிகைக்கு தயாரிப்பாளர் கேள்வி!  'பொறுக்கி'ன்னு சொன்னா இமேஜ் பாதிக்குமா??... நடிகைக்கு தயாரிப்பாளர் கேள்வி!
அஜித்தின் கதையில் விஜய்... மீண்டும் இணைகிறது முருகதாஸ் - விஜய் கூட்டணி   அஜித்தின் கதையில் விஜய்... மீண்டும் இணைகிறது முருகதாஸ் - விஜய் கூட்டணி
பீட்சா இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்  பீட்சா இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்
சிவகார்த்திகேயனும் 160 மில்லியன் டாலரும்...  சிவகார்த்திகேயனும் 160 மில்லியன் டாலரும்...
தனுஷை தொடர்ந்து ரெய்னா : கிசுகிசுவுக்கு பஞ்சமில்லாத ஸ்ருதி  தனுஷை தொடர்ந்து ரெய்னா : கிசுகிசுவுக்கு பஞ்சமில்லாத ஸ்ருதி
நயன்தாராவிற்கு குவியும் பட வாய்ப்புக்கள்..!   நயன்தாராவிற்கு குவியும் பட வாய்ப்புக்கள்..!
ரவிதேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்!   ரவிதேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்!
நடிகை அஞ்சு அரவிந்த் ஆபாசப் படங்கள்... பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்  நடிகை அஞ்சு அரவிந்த் ஆபாசப் படங்கள்... பேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலைக் காதலர்
தனுஷை நெகிழ வைத்த விஜய்!   தனுஷை நெகிழ வைத்த விஜய்!

சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: