Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

வேக நடிகை காதை கடித்த பிரெண்ட்ஸ்

வேக நடிகை காதை கடித்த பிரெண்ட்ஸ்
5th June 2012 12.38PM

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

 

கன்னத்துல கிஸ் படத்துல லேசா லங்க பிரச்னையை தொட்ட பெல் இயக்கம் ‘சமுத்திர' படத்துல மறுபடியும் அதை டச் பண்ணிருக்காராம்... இருக்காராம்... சமீபத்துல போராளி பத்திய கதையை மையமா வச்சி உருவான ஹனிகூடு படத்தை பத்தி கேள்விப்பட்ட பெல் இயக்கம் ரொம்ப பரவசமாயிட்டாராம். அந்த படத்தை பாக்கணும்னு இயக்கத்துக்கு சொல்லிவிட்டாராம். அவருக்கு ஸ்பெஷல் ஷோ போட்டப்போ இமை கொட்டாம பாத்து உருகிட்டாராம். இதோட பாதிப்பு ‘சமுத்திரÕ படத்துல எதிரொலிக்கும்னு கூட இருக்கிறவங்க சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...

வேகமான பிரிய ஹீரோயினுக்கும் சான்டல்வுட் நாட்டு மாஜி முதல் மினிஸ்டர் மகனுக்கும் லிங்க்குன்னு ரொம்ப நாளாவே கிசுகிசு வந்துச்சாம்... வந்துச்சாம்... இது காதுல விழுந்தும் எந்த எதிர்ப்பும் சொல்லாம நடிகை வேடிக்க பாத்தாராம். ஏற்கனவே குட்டியான ஒரு ஹீரோயின் இன்னொரு மாஜி முதல் மினிஸ்டரோட லிங்க் ஆகி செட்டிலானதால இவரும் அதுக்கான நேரம் பாத்துக்கிட்டிருந்தாராம். ஆனா ரெய்டு அது இதுன்னு மேட்டர் தாறுமாறா திசை மாறனதுல அப்செட்டாம்... நடிகை அப்செட்டாம்... இதுக்கு மேலேயும் வேடிக்கை பாக்காதேன்னு பிரண்ட்ஸுங்க காதை கடிச்சாங்களாம்... கடிச் சாங்களாம்... உஷாரான நடிகை மினிஸ்டர் மகன் யாருன்னே தெரியாதுன்னு சட்டன்னு ஸ்டேட்மென்ட் விட்டுட்டாராம்... விட்டுட்டாராம்..

ஓரளவுக்கு பேர் சொல்ற ஹீரோக்களுக்கே சில ஹீரோயினுங்க ஜோடி சேர மறுக்கிறாங்களாம்... மறுக்கிறாங்களாம்... இந்த விஷயத்துல அப்பான குட்டி நடிகருக்கு யோகம்தானாம். அ.ச. குதிரை படத்துல சரணமான நடிகை ஜோடி சேர்ந்தாரு. அடுத்து நடிக்கிற படத்துல ராட்டினம் பட நடிகை ஜோடி சேர்றாராம். விஷயத்தை கேள்விப்பட்ட சில ஹீரோங்க, ‘இவனுக்கு வந்த வாழ்வை பாருய்யானு புலம்புறாங்களாம்... புலம்புறாங்களாம்...


சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: