kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தி நடிகரின் மகனுடன் அக்ஷரா ஹாசன் காதல்

18th July 2012 11.03AM

இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா மகனை கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா காதலிப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின்

 இளைய மகள் அக்ஷரா. மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். அக்ஷராவுக்கும் பிரபல இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா மகன் விவானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


 விஷால் பரத்வாஜின் சாத் கூன் மாஃப் இந்தி படத்தில் விவான் நடித்துள்ளார். இதுநாள் வரை இவர்களின் நட்பு வெளிச்சத்துக்கு வராமல் இருந்தது. சமீபத்தில் அவர்கள் இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்றனர். இதையடுத்து இவர்களுக்கு இடையிலான தொடர்பு அம்பலமானது.


இருவரும் நீண்டநாட்களாக பழகி வருகின்றனர். அக்ஷரா எங்கு சென்றாலும் அவருடனே விவான் இருப்பார் என்கிறது பாலிவுட் வட்டாரம். கடந்த மார்ச் மாதம் அக்ஷராவுக்கு பிறந்த நாள் வந்தது. அப்போது நடந்த விழாவில் விவான் கலந்துகொண்டார். இதே விழாவில் கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனும் பங்கேற்றார். நெருங்கிய நண்பர்கள் தவிர அக்ஷரா, விவான் நட்பு வேறு யாருக்கும் தெரியாதாம்.


 இதுபற்றி விவான் கூறும்போது, ‘அக்ஷராவுடன் நான் டேட்டிங் செய்யவில்லை. அவரை சிறுவயதிலிருந்தே எனக்கு தெரியும். இருவரும் நட்பாக பழகி வருகிறோம். இதேபோல் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என் வாழ்வில் இதுவரை எந்த காதலியும் கிடையாது. நான் தனி ஆளாகத்தான் இருக்கிறேன்




Copyright (c) 2008-09 cinema.luxinfowin.com, All rights reserved.